நிலம் அசோசியேட்ஸ் தங்களை வரவேற்கிறது!

எங்களை பற்றி

நிலம் அசோசியேட்ஸ் என்பது பத்திரம் எழுதுதல், சொத்து பரிமாற்றம் மற்றும் பதிவு நடைமுறைகள் தொடர்பான முழுமையான பயிற்சி மற்றும் வழிகாட்டலை வழங்கும் நம்பகமான அமைப்பாகும். பத்திரம் எழுதுவது மற்றும் பதிவு செயல்முறைகளில் அனுபவத்துடன் மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் துறையில் நேரடி கள அனுபவம் கொண்ட பின்னணியில் இருப்பதால், நடைமுறை சார்ந்த பயிற்சிகளை வழங்குகிறோம்.

பத்திர பதிவு முழுமையான வழிகாட்டி பயிற்சி

யார் பங்கேற்கலாம்?

 

👨‍🎓 மாணவர்கள்

💼 தொழில் முனைவோர்

👩 மாணவிகள் / பெண்கள்

🏠 இல்லத்தரசிகள்

🏠 ரியல் எஸ்டேட் முகவர்கள்

👨‍⚖️ வழக்கறிஞர்கள்

⚖️ சட்டக்கல்லூரி மாணவர்கள்

🏢 இ சேவை மையம் நடத்துபவர்கள்

🏢 ஜெராக்ஸ் - Shop நடத்துபவர்கள்

👨‍⚖️ ஓய்வு பெற்றவர்கள்

📝 புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள்

பயிற்சியில் நீங்கள் பெறுவது

 

📜 - சொத்து வரலாறு

மன்னர் காலம் முதல் நவீன காலம் வரை சொத்து உரிமைப் பயணம். போலி பத்திரங்கள் மற்றும் உரிமைச் சங்கிலி தவறுகளைக் கண்டுபிடிக்கும் திறன்.

✍️ - Hands-on Workshop

நடைமுறை டிராஃப்டிங் பட்டறை - நிஜ பத்திரங்களை உங்கள் கைகளால் எழுதப் பழகுவீர்கள்.

📝 - பத்திர வகைகள் & வேறுபாடுகள்

Sale, Gift, Settlement, Partition, Release, Will - எப்போது, ஏன் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் விதிகள் - முழுமையான பயிற்சி.

💻 - TNREGINET ஆன்லைன்

பதிவேற்றம் முதல் டோக்கன்/ஸ்லாட் புக்கிங் வரை முழு ஆன்லைன் நடைமுறைகளையும் நீங்களே செய்யும் நம்பிக்கை.

⚖️ - Registration Act

எந்தப் பத்திரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் கட்டாயமாகப் பதிவு தேவையில்லை என்பதை அறிவீர்கள்.

📑 - EC படித்தல்

Encumbrance Certificate-ல் mortgage, நீதிமன்ற தடை, முந்தைய விற்பனை போன்ற வில்லங்கங்களைக் கண்டுபிடிக்கும் திறன்.

💰 - முத்திரை தீர்வை & கட்டணம்

வெவ்வேறு பத்திரங்களுக்கு முத்திரை தீர்வை & கட்டணம் எவ்வாறு மாறுபடும் என்பதை புரிந்திருப்பீர்கள்.

✅ - சரிபார்ப்புகள்                              

Title Chain, EC, பட்டா, சிட்டா, A-Register, FMB போன்ற அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கும் முறை.

🔐 - Power of Attorney                               

POA வகைகள் (GPA/SPA), சட்டபூர்வ வரம்புகள், சொத்து பரிமாற்றத்தில் உள்ள ஆபத்துகள்.

📚 - Case Studies

நிஜ வாழ்க்கை தவறுகள் - எல்லைப் பிழை, உரிமைச் சங்கிலி குறைபாடு, POA தவறுகள் - எப்படி தவிர்ப்பது.

🏛️ - SRO நடைமுறைகள்

சப்ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் டோக்கன் முதல் கையெழுத்து வரை முழு படிநிலை தெளிவாகத் தெரியும்.

⚠️ - Property Disputes

வழக்குகள் எவ்வாறு உருவாகின்றன - பெண்கள் உரிமை, சகோதரர்கள் பிரச்சனைகள், சட்ட அடிப்படைகள்.

📄 - Certified Copy

பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் மற்றும் EC பெறும் முழு நடைமுறை.

📋 - Checklist

ஆவண எழுத்தருக்கான சரிபார்ப்புப் பட்டியல் - தவறுகளை 90% குறைக்கும்.

❓ - பதிவு அதிகாரி கேள்விகள்

60 சாத்தியமான கேள்விகள் மற்றும் சரியான பதில்கள் - முழு தயார்நிலை.

🎯 - நம்பிக்கை

விற்பனை, குடும்ப பரிவர்த்தனை, உயில் - அனைத்து வகைப் பத்திரங்களையும் எழுதுவது மற்றும் பதிவதில் தேர்ச்சி.

💼 - வணிகம்

உங்கள் சொந்த ஆவண / பத்திரம் எழுதும் வணிகத்தை திறம்பட நடத்தும் முறைகள்.

🏆 - Viva & Certificate

கேள்வி-பதில் மூலம் அறிவை சோதித்தல் மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கல்.

நல்லுரைகள்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)❓

 

இந்த பயிற்சிக்கு யார் பங்கேற்கலாம்?

மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர், சேவை மையம் நடத்துபவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள், வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். முன் அனுபவம் தேவையில்லை.

பயிற்சி எத்தனை நாட்கள்?

இரண்டு நாட்கள் தீவிர பயிற்சி. காலை முதல் மாலை வரை முழுநேர பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி கட்டணத்தில் என்ன என்ன அடங்கும்?

₹9,999/- கட்டணத்தில் இரண்டு நாட்கள் தங்கும் இடம், காலை, மதியம், இரவு உணவு, தேநீர், பயிற்சி பாடத் தொகுப்பு, சான்றிதழ் அனைத்தும் அடங்கும்.

முன்பதிவு அவசியமா ? பதிவு செய்வது எப்படி?

ஆம் முன்பதிவு அவசியம். தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவு அவசியமாகும். கீழே உள்ள "இப்போதே பதிவு செய்யுங்கள்" பட்டனை அழுத்தி எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அல்லது தொலைபேசி / WhatsApp மூலம் உடனடியாக பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் செலுத்தி உங்கள் இடத்தை உறுதிப்படுத்துங்கள்.

இடங்கள் எத்தனை உள்ளன?

குறைந்த இடங்களே உள்ளன. தரமான பயிற்சியை உறுதி செய்ய, வரம்புக்குட்பட்ட பங்கேற்பாளர்களே அனுமதிக்கப்படுவார்கள். விரைவில் பதிவு செய்யுங்கள்!

கட்டணம் செலுத்தும் முறை என்ன?

Google Pay, PhonePe, வங்கி பரிமாற்றம் அல்லது ரொக்கமாக செலுத்தலாம். முன்பதிவு தொகை செலுத்தி உங்கள் இடத்தை பதிவு செய்யுங்கள்.

பயிற்சி மொழி என்ன?

பயிற்சி முழுவதும் தமிழில் அளிக்கப்படும். எளிமையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் விளக்கப்படும்.

பயிற்சி முடிவில் சான்றிதழ் கிடைக்குமா?

ஆம், பயிற்சி முடிவில் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதலாக Viva மூலம் உங்கள் அறிவை சோதிக்கும் வாய்ப்பும் உண்டு.

லேப்டாப் அல்லது கணினி எடுத்து வர வேண்டுமா?

லேப்டாப் எடுத்து வந்தால் நல்லது. ஆனால் கட்டாயம் அல்ல. TNREGINET ஆன்லைன் பயிற்சிக்கு லேப்டாப் இருந்தால் நீங்களே பயிற்சி செய்யலாம். அல்லது குழுவாக பயிற்சி அளிக்கப்படும்.

தங்குமிட வசதி எப்படி இருக்கும்?

இயற்கை எழில் கொஞ்சும் சுத்தமான காற்றோட்டமுள்ள அறைகள், படுக்கை வசதி, கழிவறை உள்ளிட்ட முழுமையான தங்குமிட வசதி அளிக்கப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் தனி தனி அறைகள் ஏற்பாடு செய்யப்படும்.

இந்த பயிற்சியின் பிறகு என்ன செய்யலாம்?

உங்கள் சொந்த ஆவண / பத்திரம் எழுதும் சேவை மையம் துவங்கலாம், வழக்கறிஞர்களுக்கு உதவியாளராக வேலை செய்யலாம், அல்லது இந்த அறிவை உங்கள் தற்போதைய தொழிலில் பயன்படுத்தலாம்.

2026 ஆம் ஆண்டிற்கான உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்குங்கள்!

விவரம் பெற